நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: வெலிங்டனில் சாதனை படைக்குமா இந்தியா?
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. உலகின் அதிக காற்று வீசும் நகரமான வெலிங்டனில் காற்றின் தாக்கத்தை சமாளிப்பது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். இங்குள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்திய அணி இதுவரை வெலிங்டனில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள நிலையில், <b>1968-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை வெற்றி பெறவில்லை</b>. இதனால் 58 ஆண்டுகால ஏக்கத்தை தணித்து இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.