தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
மத்திய சுற்றுலாத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது கல்லணை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க <b>தஞ்சாவூர் பெரிய கோவில்</b> உள்ளிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் குமார் ஜா, தாஜ்மஹாலை விட பெரிய கோவில் பிரமாண்டமாக உள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் உள்ள இக்கோவிலை, <b>உலக அதிசய பட்டியலில்</b> சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு சார்பில் நிச்சயம் பரிந்துரைக்கப்படும் என்று அவர் கூறினார்.